திருப்புத்தூர் : திருப்புத்தூர் ஒன்றிய எம்.ஆலம்பட்டி நடுநிலைப்பள்ளிக்கு மாநில கல்வித்துறையின் கற்போம் எழுதுவோம் திட்டத்திற்கான 2020--21ம் ஆண்டிற்கான மாநில எழுத்தறிவு விருது வழங்கப்பட்டது.
கற்போம் எழுதுவோம் இயக்கத்தில் ஆலம்பட்டி பள்ளியில் 20 பேருக்கு எழுத்தறிவு கற்பிக்கப்பட்டது. கற்றல் செயல்பாடுகள் ஊக்குவிக்கப்பட்டது. இதனால் கற்பித்தலுக்கான மாநில விருதை சிவகங்கைமாவட்டத்தில் ஆலம்பட்டி பள்ளி தலைமையாசிரியர் ஸ்ரீதர்ராவுக்கும், தன்னார்வலர் கீதா ஆகியோருக்கு திருச்சியில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மகேஷ் வழங்கினார்.மாவட்ட அளவில்இத்திட்டத்தில் பங்கேற்ற 265 மையங்களில் 3 பள்ளி மையங்கள் தேர்வு செய்யப்பட்டது.
மற்ற இரு விருதுகளை காரைக்குடி நகராட்சி 17 வது வார்டு துவக்கப்பள்ளி தலைமையாசிரியர் ஈஸ்வரன், தன்னார்வலர் அப்துல்லா பீவி, வ.உ.சி.நகராட்சி துவக்கப்பள்ளி தலைமையாசிரியை மங்களேஸ்வரி, தன்னார்வலர் பாண்டிமீனாள் ஆகியோருக்கும் விருதுகள் வழங்கப்பட்டது.