வயல் வழியை மறித்து ரயில் பாதை விவசாயிகள் முற்றுகையால் பரபரப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 டிச
2021
01:19

தர்மபுரி:விவசாய நிலத்துக்கான வழியை மறித்து ரயில் பாதை அமைத்து வரும், ஹெச்.பி.சி.எல்., நிறுவனத்தை கண்டித்து விவசாயிகள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி தாலுகாவுக்கு உட்பட்டது சிவாடி பஞ்சாயத்து. இதை ஒட்டிய பகுதியில், பொதுத் துறை நிறுவனமான ஹெச்.பி.சி.எல்., நிறுவனம், எரிபொருள் சுத்திகரிப்பு மையம் அமைக்க, 140 ஏக்கருக்கு மேல் நிலத்தை கையகப்படுத்தியது.சிவாடி ரயில்வே ஸ்டேஷனில் இருந்து, ஹெச்.பி.சி.எல்., நிறுவனத்துக்கு இரண்டு ரயில் பாதைகள் அமைக்கும் பணி சமீபத்தில் துவங்கியது.


இதனால், ஹெச்.பி.சி.எல்., நிறுவனத்துக்கு இடம் கொடுத்தவர்கள், அந்நிறுவனம் அருகே உள்ள தங்களது 500 ஏக்கருக்கு மேலான விவசாய நிலங்களுக்கு சென்று வர முடியாத நிலை ஏற்பட்டது.இதை கண்டித்து, அப்பகுதி மக்கள் நேற்று ரயில் பாதை பணி நடக்கும் இடத்தில் குவிந்தனர். போலீசார் குவிக்கப்பட்டனர்.


சிவாடி ரயில்வே ஸ்டேஷனில், டி.எஸ்.பி., வினோத், தர்மபுரி தொகுதி பா.ம.க.,- எம்.எல்.ஏ., வெங்கடேஷ்வரன் ரயில்வே மற்றும் ஹெச்.பி.சி.எல்., அதிகாரிகள் பேச்சு நடத்தினர்.இதில், அப்பகுதி விவசாயிகள், தங்களது நிலத்துக்கு செல்ல பாதை வசதி ஏற்படுத்தி தரும் வரை, ரயில் பாதை பணிகளை நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, பிரச்னை முடிவுக்கு வந்தது.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X