கோவை:கார்த்திகை மாத தேய்பிறை பிரதோஷத்தையொட்டி, சிவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடை பெற்றன.பிரதோஷ விரதம் மேற்கொண்டால் திருமணம் கைகூடும், குழந்தை பாக்கியம் கிடைக்கும், வறுமை விலகும், நோய்கள் நீங்கும், சகல காரியங்களிலும் வெற்றி கிடைக்கும். கார்த்திகை பிரதோஷத்தில், சிவபெருமானை வழிபாடு செய்தால், அனைத்து பாவங்களிலும் நிவர்த்தி கிட்டும் என்பது ஐதீகம்.கோட்டை சங்கமேஸ்வரர் கோவிலில் கார்த்திகை மாத தேய்பிறை பிரதோஷத்தை யொட்டி, ஓதுவாமூர்த்திகள் திருமுறை பாராயணம் மேற்கொள்ள, சிவபெருமானுக்கும், நந்தியெம்பெருமானுக்கும், பச்சரிசிமாவு, திருமஞ்சன பொடி, பால், தயிர், சந்தனம், ஜவ்வாது, விபூதி, தேன், பஞ்சாமிர்தம், சந்தானாதி தைலம் உள்ளிட்ட வாசனை திரவியங்களால், அபிஷேகம் நடைபெற்றது.தொடர்ந்து, அலங்கரிக்கப்பட்ட சுவாமி கோவிலை வலம் வரச்செய்து, சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. திரளான பக்தர்கள் வழிபட்டனர்.