போத்தனூர்:போத்தனூர் -- செட்டிப்பாளையம் சாலையில், மாநகராட்சி கழிவு நீர் பண்ணை உள்ளது. இவ்வளாகத்தின் ஒரு பகுதியில், மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தினமும் சேகரிக்கப்படும் குப்பை கழிவு கொட்டப்படுகிறது. தற்போது இங்கு பல லட்சம் டன் குப்பை கழிவு தேங்கியுள்ளது.மழைக்காலங்களில் குப்பை கழிவிலிருந்து துர்நாற்றம் வீசும். இத்துர்நாற்றம் ஸ்ரீராம் நகர், அருள் முருகன் நகர், சக்தி நகர், அன்பு நகர், கோணவாய்க்கால்பாளையம் உள்ளிட்ட சுற்றுப்பகுதிகளில் அதிகளவு இருக்கும்.கடந்த சில நாட்களாக பெய்த, கனமழையால் துர்நாற்றம் அதிகரித்துள்ளது. மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மாநகராட்சி அதிகாரிகள் கவனிப்பார்களா?