என்.டி.சி.,மில்களை திறக்கக்கோரிதொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 டிச
2021
01:58

கோவை:கோவையில் மூடப்பட்டுள்ள மில்களை திறக்கக்கோரி, தொழிலாளர்கள் மில்கள் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.கொரோனா பாதிப்பால் கடந்த ஆண்டு மார்ச் 24ம் தேதி முதல், காலவரையின்றி என்.டி.சி.,மில்கள் மூடப்பட்டன. தற்போது வரை திறக்கப்படவில்லை. இதனால் மில்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு, பாதி ஊதியமே வழங்கப்பட்டது. கடந்த அக்டோபரிலிருந்து, அந்த ஊதியமும் வழங்கப்படவில்லை. இதனால் தொழிலாளர்களின் குடும்பங்கள் கடும் அவஸ்தைக்குள்ளாகின. மில்களை திறந்து இயக்க வலியுறுத்தியும், தொழிலாளர்களுக்கு முழுமையான சம்பளத்தை வழங்க கோரியும், என்.டி.சி.,மில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.கோவையிலுள்ள முருகன், கம்போடியா, ஸ்டேன்ஸ் உள்ளிட்ட ஏழு மில்களின் வாயில் முன், தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இது குறித்து தொழிலாளர்கள் கூறியதாவது:என்.டி.சி.மில்களை பாதுகாப்போம் என்ற நோக்கத்துடன், அகில இந்திய அளவில் அமைக்கப்பட்டுள்ள அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கைக்குழுவினர், வரும் 6ம் தேதி டில்லியில் ஒன்று கூடி அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுப்பர்.எம்.பி.,க்களை சந்திக்கவும், அதற்கு அடுத்த நாள் ஜவுளித்துறை அமைச்சரை சந்திக்கவும் முடிவு செய்துள்ளனர். அப்போதும் பிரச்னைக்கு தீர்வு காணாவிட்டால், டில்லியில் போராட்டம் நடத்த ஏகமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு, தொழிலாளர்கள் கூறினர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X