ஆலாந்துறை:பூலுவபட்டியில், பைக் மோதிய விபத்தில் சிகிச்சை பெற்று வந்த முதியவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.பூலுவபட்டி, சிறுவாணி ரோட்டில், ஜெயராஜ் என்பவர், தள்ளுவண்டியில் டிபன் கடை வைத்து நடத்தி வருகிறார். வெளிமாநிலத்தை சேர்ந்த சண்முகம், 70 என்பவர், ஜெயராஜுக்கு உதவியாக, தள்ளுவண்டி கடையில் இருந்து வந்துள்ளார்.கடந்த, 23ம் தேதி, சண்முகம் சிறுவாணி ரோட்டை கடக்க முயன்றபோது, அவ்வழியாக, அதிவேகமாக வந்த பைக் மோதியது. படுகாயமடைந்த சண்முகத்தை, அருகில் இருந்தவர்கள் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.சிகிச்சை பலனின்றி, சண்முகம் நேற்று உயிரிழந்தார். ஆலந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.