கோவை:அவினாசி ரோட்டில், அரை ஏக்கர் பரப்பளவில் புதிதாக, 'பில்லர்- 129' என்ற, மல்டிகசின் ரெஸ்டாரன்ட் வரும் 6ம் தேதி திறக்கப்படுகிறது.இதுகுறித்து, நிக்வின் ஹாஸ்பிட்டாலிட்டி சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் இயக்குனர் உமா மற்றும் நிர்வாக இயக்குனர் மோகன் சந்தர் நிருபர்களிடம் கூறியதாவது:நிக்வின் ஹாஸ்பிட்டாலிட்டி நிறுவனம் சார்பில், சித்தாபுதுாரில் 'விருந்தோம்பல்' என்ற தென்னிந்திய சைவ, அசைவ உணவகம் செயல்படுகிறது. வாடிக்கையாளர்களின் ஆதரவை தொடர்ந்து, பன்னாட்டு உணவுகள் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில், அவினாசி ரோட்டில், 'பில்லர்-129' என்ற, புதிய ரெஸ்டாரன்ட் வரும் 6ம் தேதி திறக்கப்படுகிறது.கிட்டத்தட்ட, அரை ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள, இந்த ரெஸ்டாரன்ட் காலை, 11:00 முதல் இரவு 11:00 மணி வரை செயல்படும். பிறந்தநாள் உள்ளிட்ட, சுபநிகழ்வுகள் கொண்டாட, 'பார்ட்டி ஹால்' வசதி உள்ளது.டிரைவ் இன் ரெஸ்டாரன்ட்டாக செயல்படவுள்ள, பில்லர் 129 திறப்பு விழாவுக்கு, கோயமுத்துார் ஓட்டல்கள் சங்கத் தலைவர் ஸ்ரீனிவாசன், முன்னாள் துணை மேயர் கார்த்திக் உள்ளிட்டோர், சிறப்பு விருந்தினராக பங்கேற்கின்றனர்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.