886 கிலோ குட்கா பறிமுதல்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 டிச
2021
02:18

கோவை:கோவை ஆர்.எஸ்.புரத்தில் 886 கிலோ குட்கா பதுக்கி வைத்திருந்த நபரை, போலீசார் கைது செய்தனர்.கோவை ஆர்.எஸ்.புரத்தில் எஸ்.ஐ., சுகுமாரன் தலைமையிலான போலீசார் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது தடாகம் ரோட்டில் வாழைக்காய் மண்டி அருகே, ராமச்சந்திரன், 38, என்பவர் கடையில் குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள், விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது.அவரை கைது செய்த போலீசார், அவர் பதுக்கி வைத்திருந்த 886 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். ராமச்சந்திரன் மீது புகையிலை பொருட்கள் தடைச்சட்டம் மட்டுமின்றி, இந்திய தண்டனைச்சட்டப் பிரிவு 328ன்படியும் வழக்கு பதியப்பட்டுள்ளது.ஜாமினில் வெளிவர முடியாத இந்த பிரிவின்படி தண்டிக்கப்பட்டால், அதிகபட்சம் பத்தாண்டு வரை சிறை தண்டனையும், அபராதமும் விதிக்க முடியும்.அதிக குட்கா பொருட்களுடன் பிடிபடுவோர் மீது, இந்த சட்டப்பிரிவில் வழக்கு பதிய, போலீசார் முடிவு செய்துள்ளனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X