மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையம் நடூரில் தனியார் வீட்டு சுற்றுச்சுவர் இடிந்து, வீடுகளின் மீது விழுந்ததில், 17 பேர் இறந்தனர். இவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், தமிழ் புலிகள் கட்சி, தமிழர் ஒற்றுமை கூட்டம் மேட்டுப்பாளையத்தில் தனியார் மண்டபத்தில் நடந்தது.மாவட்ட செயலாளர் ராவணன் தலைமை வகித்தார். மாநிலத் தலைவர் நாகை திருவள்ளுவன் மனிதநேய மக்கள் கட்சி பொது செயலாளர் எம்.எல்.ஏ., அப்துல் சமீது, பெ.தி.க., பொது செயலாளர் ராமகிருஷ்ணன், எழுத்தாளர் மதிமாறன், மலரவன், சபாபதி உட்பட பலர் பேசினர். இறுதியில் மெழுகுவர்த்தி ஏந்தி, இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.