செய்திகள் சில வரிகளில்...
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 டிச
2021
02:48

வால்பாறை மலைப்பாதையில் உள்ள ரோடுகள் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சீரமைக்கப்படுகிறது. கொண்டைஊசி வளைவுகளில் விபத்து ஏற்படாமல் இருக்க, ஆழியாறு முதல் வால்பாறை வரை, குவிக்கண்ணாடிகள் பொருத்தப்பட்டுள்ளன.பெரும்பாலான இடங்களில் ரோடு விரிவுபடுத்தும் பணி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், எஸ்டேட் பகுதிகளுக்கு செல்லும் ரோட்டில், பல இடங்களில் தடுப்புச்சுவர் கட்டப்படாமல் உள்ளது. சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து செல்லும் ரோடுகளில் தடுப்புச்சுவர் இல்லாததால், விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.மக்கள் கூறுகையில், 'வால்பாறையில் இருந்து ரொட்டிக்கடை, பாரளை வழியாக சோலையாறு செல்லும் ரோட்டில் தடுப்புச்சுவர் இல்லை. இதனால், வேகமாக வரும் வாகனங்கள் விபத்துள்ளாகும் அபாயம் உள்ளது. அசம்பாவிதம் ஏற்படுவதற்குள், தடுப்புச்சுவர் கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.



பி.டி.ஓ.,க்கள் பொறுப்பேற்பு



கிணத்துக்கடவு வட்டார, கிராம ஊராட்சிகள் பி.டி.ஓ.,வாக பணியாற்றிய விவேகானந்தன், கோவை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைக்கும், நிர்வாக பி.டி.ஓ.,வாக பணியாற்றிய கணேசன், தொண்டாமுத்துாருக்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.இவர்களுக்கு பதிலாக, எஸ்.எஸ்.குளத்தில் பணியாற்றிய தனலட்சுமி, கிணத்துக்கடவு பொது நிர்வாக பி.டி.ஓ.,வாகவும், ஆனைமலையில் பணியாற்றிய ஜெயக்குமார், கிணத்துக்கடவு கிராம ஊராட்சிகள் பி.டி.ஓ., ஆகவும் இடமாற்றம் செய்யப்பட்டு, பொறுப்பேற்றனர்.


ஆவணத்துக்கு அவகாசம் கேட்பு



வால்பாறை சுற்றுலா மேம்பாட்டு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் சுரேஷ், அலி ஆகியோர், பொள்ளாச்சி சப்-கலெக்டருக்கு மனு அனுப்பியுள்ளனர். மனுவில் கூறியிருப்பதாவது:வால்பாறைக்கு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து செல்கின்றனர். வால்பாறையில் 'ேஹாம் ஸ்டே' என்ற பெயரில் கடந்த பல ஆண்டுகளாக தங்கும் விடுதிகள் நடத்தி வருகின்றனர்.கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவல் காரணமாக சுற்றுலா பயணிகள் வருகை வெகுவாக குறைந்துள்ளது.



இந்நிலையில், தங்கும்விடுதி நடத்தி வருபவர்களிடம் உரிய ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு போலீசார் கேட்டு வருகின்றனர்.உடனடியாக ஆவணங்களை சமர்ப்பிக்க முடியாத நிலையில், விடுதி உரிமையாளர்கள் உள்ளனர். எனவே, தங்கும் விடுதிகள் நடத்தி வருபவர்கள் அதற்குரிய ஆவணங்களை சமர்ப்பிக்க போதிய கால அவகாசம் வழங்க வேண்டும்.சுற்றுலா வளர்ச்சியை ஊக்குவிக்க அரசு உதவ வேண்டும்.இவ்வாறு, மனுவில் தெரிவித்துள்ளனர்.



பள்ளியில் விழிப்புணர்வு கூட்டம்



ராகல்பாவி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், பாலியல் வன்கொடுமை தடுத்தல் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில், தலைமையாசிரியர், இரு ஆசிரியர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள் ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளனர்.நேற்று, இக்குழு சார்பில் கூட்டம் நடத்தப்பட்டது. தலைமையாசிரியர் சாவித்ரி, தலைமை வகித்தார். கூட்டத்திற்கு பள்ளி தலைமை ஆசிரியர் சாவித்திரி தலைமை தாங்கினார். ஆசிரியர் கண்ணபிரான் குழு சார்ந்த செயல்பாடுகள் குறித்து விளக்கிப் பேசினார்.அதேபோல், 'தற்போது, மழைக்காலம் என்பதால், பள்ளி குழந்தைகளை பாதுகாப்பாக சுகாதாரத்தோடு கண்காணிக்க வேண்டும்; பள்ளிக்கு வந்து வீடு திரும்பும் வரை அவர்கள் மீது தனி கவனம் செலுத்த வேண்டும்,' என, எடுத்துரைக்கப்பட்டது.



மதுக்கூடமான மயான வளாகம்



பொள்ளாச்சி வடக்கு ஒன்றியம் சிக்கராயபுரம் ஊராட்சி, அர்த்தநாரிபாளையம் பொதுமயானம், கடந்த சில ஆண்டுகளாக மது அருந்துவோரின் கூடாரமாக மாறியுள்ளது. பிரதான ரோட்டையொட்டி அமைந்திருந்தாலும், அப்பகுதியில் போலீசார் சரிவர கண்காணிப்பு பணியில் ஈடுபடுவதில்லை.நடுப்புணி ரோட்டை அடுத்துள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்கும் 'குடி'மகன்கள், போதையேற்றிக் கொள்ள இங்கு வருகின்றனர். மயான மண்டபத்தில் அமர்ந்து, மது அருந்துகின்றனர்.இதனால், அக்கம்பக்க தோட்டங்களில் வசிப்போர், அவ்வழியே செல்லும் பெண்கள் அவதிக்குள்ளாகின்றனர். இதைக் கட்டுப்படுத்த, போலீசார் நடவடிக்கை எடுக்காமல் மெத்தனம் காட்டுவது, மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.



பா.ஜ.,வின் 'தேர்தல் திருவிழா'



மடத்துக்குளம் பாஜ., சார்பில், குமரலிங்கம், மடத்துக்குளம், கணியூர் பேரூராட்சிகளில், உள்ளாட்சி தேர்தல் பணிகள் தீவிரமடைந்துள்ளது. இதன் ஒரு பகுதியாக வடக்கு ஒன்றிய பா.ஜ., தலைவர் கார்த்திகேயன் தலைமையில், 'தேர்தல் திருவிழா' என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டு, கணியூர் பேரூராட்சிக்குட்பட்ட, 15 வார்டுகளில், போட்டியிடும், கட்சியினரிடம் விருப்ப மனு பெறப்பட்டது.வார்டு உறுப்பினர்கள் பொறுப்புக்கு போட்டியிடுபவர்கள் விருப்ப மனு கொடுத்த போது, அதற்கான தொகையாக பொது பிரிவுக்கு, 1,000 ரூபாய், ஆதிதிராவிடர்களுக்கு, 500 ரூபாய் பொதுப்பிரிவு பெண்களுக்கு, 500 ரூபாய் பெறப்பட்டு, இந்த மனுக்கள் மாவட்ட பொறுப்பாளர்களிடம் சமர்ப்பிக்கப்பட்டது.



தேர்தலுக்கு பா.ஜ., ஆயத்தம்



பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி தேர்தல் விரைவில் நடத்த அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதற்காக, தி.மு.க., - அ.தி.மு.க., - காங்., மற்றும் பா.ஜ., உள்ளிட்ட கட்சிகளில், விருப்ப மனுக்களை பெறப்பட்டுள்ளது.கிணத்துக்கடவு, நெகமம் பேரூராட்சி தேர்தலில் பா.ஜ., சார்பில் போட்டியிட, கட்சியினர் விருப்ப மனு கொடுத்தனர். கிணத்துக்கடவு பேரூராட்சி தேர்தலில் போட்டியிட, பா.ஜ.,சார்பில், 10 பேர் விருப்ப மனு கொடுத்துள்ளனர். நெகமம் பேரூராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் போட்டியிட, 17 பேர் விருப்ப மனு கொடுத்தனர்.



சிறு, குறு விவசாயிகள் கவனத்துக்கு...



மடத்துக்குளம் பகுதியில் ஐந்து ஏக்கருக்கு குறைவாக உள்ள விவசாயிகளுக்கு சிறு, குறு விவசாயி சான்றிதழ் விரைந்து வழங்க, இன்று,3ம் தேதி தாந்தோணி கிராம நிர்வாக அலுவலகத்தில், முகாம் நடக்கிறது. காலை 10:00 மணி தொடங்கி மதியம் 3:00 மணி வரை நடக்கும் முகாமில், சிறு,குறு விவசாயி சான்றிதழ் வழங்க கோரும் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்படுகிறது.நுண்ணீர் பாசனம் அமைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்படும். சிறு, குறு விவசாயி சான்றுக்கு விண்ணப்பிக்க சிட்டா, அடங்கல், உரிமைச்சான்று, பத்திர நகல், ஆதார் அட்டை, ரேஷன்கார்டு,பாஸ்போர்ட் சைஸ் போட்டோ இரண்டு ஆகியவற்றை கொண்டு வர வேண்டும். நுண்ணீர் பாசனம் அமைக்கும் போது, நீர் சிக்கனம் ஏற்படுவதுடன், பயிருக்கு தேவையான அளவுக்கு மட்டுமே நீர் செலவாகும். இதை உணர்ந்து, சிறு, குறு விவசாயிகள் அனைவரும் நுண்ணீர் பாசனத்துக்கு மாற வேண்டும்.கூடுதல் விபரங்களுக்கு, உதவி தோட்டக்கலைதுறை அலுவலர் தாமோதரனை, 9659838787 என்ற மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.



எய்ட்ஸ் தின விழிப்புணர்வு



உலக எய்ட்ஸ் தினம் ஆண்டுதோறும் டிச.,1-ல், கடைபிடிக்கப்படுகிறது. அவ்வகையில், உடுமலை கிளை நுாலகம் எண் இரண்டில் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.நூலகர் கணேசன் தலைமை வகித்தார். பின், 'எய்ட்ஸ் பாதித்த நபர்கள் இடையே ஏற்றத்தாழ்வுகளை தவிர்ப்போம். எய்ட்ஸ், கொரோனா உள்ளிட்ட பெரும் நோய்த் தொற்றுக்களை முடிவு கட்டுவோம்,' என உறுதிமொழி ஏற்கப்பட்டது.



நூலக வாசகர் வட்ட உறுப்பினர் விஜயலட்சுமி, அரசு மருத்துவமனை மனநல ஆலோசகர் மணிகண்டராஜ், நூலகர்கள் மகேந்திரன், பிரமோத் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.பரிதாப நிலையில் நிழற்கூரைமடத்துக்குளம் தாலுகா ஆஸ்பத்திரி மேடு பகுதியில், ஆயிரக்கணக்கான மக்கள் வசிக்கின்றனர்.இப்பகுதியிலிருந்து, உடுமலை, தாராபுரம், பொள்ளாச்சி, மற்றும் பழநி உள்ளிட்ட நகரங்களுக்கு அரசு பணி மற்றும் பல்வேறு காரணங்களுக்காக, நுாற்றுக்கணக்கான மக்கள் பயணிக்கின்றனர்.இவர்கள் காத்திருக்க ஆரம்ப சுகாதார நிலையம் அருகே பத்தாண்டுகளுக்கு முன்பு நிழற்கூரை கட்டப்பட்டது. தற்போது அந்த கட்டடம் மிகவும் பழுதடைந்துள்ளது.



பயணிகள் கூறுகையில், 'நிழற்கூரையின், தரைத்தளம் முழுவதும் இடிந்து மண் தரை ஆகிவிட்டது. இருக்கைகள் உடைந்தும், சிதைந்தும் அமர முடியாத அளவில் உள்ளது. சுவர்களின் பல இடங்களிலும், மேற்கூரையிலும் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால், இதைப் பயன்படுத்த அச்சமாக உள்ளது. இதற்கு மாற்றாக புதிய நிழற்கூரை அமைக்க வேண்டும்,' என்றனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X