வால்பாறை:தமிழக - கேரள எல்லையில் அமைந்துள்ளது வால்பாறை. இங்குள்ள மளுக்கப்பாறை போலீசார் மற்றும் வனத்துறை சார்பில், பல்வேறு செட்டில்மென்ட் பகுதியில் வசிக்கும் பழங்குடியின மாணவர்களுக்கான வேலை வாய்ப்பு பயிற்சி நடந்தது. அரசு வேலை கிடைக்கும் வகையில் தேர்வுக்கான பயிற்சி வகுப்பு நடந்தது. அதிரப்பள்ளி இன்ஸ்பெக்டர் சிஜூ, திருச்சூர் குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் அனில்குமார் ஆகியோர் தலைமையில் பயிற்சி வகுப்பு நடந்தது.போலீசார் கூறுகையில், 'அதிரப்பள்ளி மற்றும் மளுக்கப்பாறையில் உள்ள பல்வேறு செட்டில்மென்ட் பகுதியை சேர்ந்த, பழங்குடியின மாணவர்கள், 180 பேர் 'ஆன்லைன்' வாயிலாக அரசு பணி தேர்வுக்காக படிக்கின்றனர். மளுக்கப்பாறையில் படிக்கும், 50 மாணவர்கள், அரசு வேலை வாய்ப்புக்கு தேர்வு எழுத வசதியாக, ஸ்டேஷன் அருகில் இலவச பயிற்சி வகுப்பு நடக்கிறது. பயிற்சியில் பங்கேற்கும் பழங்குடியின மாணவர்களுக்கு இலவச புத்தகங்கள் மற்றும் உணவும் வழங்கப்படுகிறது,' என்றனர்.