பள்ளி, நூலகம் அருகே கழிவுகள்: கலெக்டரிடம் பொதுமக்கள் மனு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 டிச
2021
02:51

பொள்ளாச்சி;பொள்ளாச்சியில் நடந்த மக்கள் தொடர்பு முகாமில், மாவட்ட கலெக்டரிடம் பொதுமக்கள் மனுக்கள் வழங்கினர். பொள்ளாச்சி நகர தலைமை விஜய் மக்கள் இயக்கம் சார்பில் கொடுத்த மனு:பொள்ளாச்சி பத்ரகாளியம்மன் கோவில் வீதி அருகே ரயில்வே கேட் உள்ளது. இங்குள்ள சாலை குறுகலாக உள்ளதால், வாகனங்கள், நடந்து செல்வோர் மிகவும் அவதிப்படுகின்றனர்.ரயில் வரும் நேரத்தில் கேட் மூடப்படும் போது, ரோட்டில் வாகனங்கள் நிறுத்த சிரமப்படுகின்றனர். ரயில் சென்ற பின் வாகனங்கள் நகரும் போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, இந்த இடத்தை ஆய்வு செய்து ரோடு அகலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.எம்.ஜி., நகர் குடியிருப்போர் நலவாழ்வு சங்கம் கொடுத்த மனு:குடியிருப்பு பகுதியில், 125 குடும்பங்கள் உள்ளன. இங்கு, மெயின் ரோடு, குறுக்கு தெரு உள்ளிட்ட பகுதிகளில், தார் ரோடு வசதி இல்லை. கழிவுநீர் வடிகால் வசதியும் இல்லை.போதிய தெருவிளக்கு வசதியும் இல்லாததால் இரவு நேரங்களில் வருவோர் சிரமப்படுகின்றனர். குடிநீர், 10 நாட்களுக்கு ஒரு முறை தான் வினியோகிக்கப்படுகிறது.பள்ளிக்கூடம் மற்றும் நுாலக கட்டடம் அருகே குப்பை கழிவுகள் குவிந்து கிடப்பதால் சுகாதாரம் பாதிக்கிறது. அரசு நடுநிலைப்பள்ளி கட்டடம் மிகவும் சேதமடைந்துள்ளது. இப்பகுதியில் உள்ள குறைகளை சரி செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் தெரிவித்துள்ளனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
03-டிச-202117:34:37 IST Report Abuse
Ram Pollachi பேசாமல் தண்டவாளத்தை புடுங்கி வீசி விடுங்கள். ஆழியாறு மெயின் ரோட்டுக்கு மாதம் இரண்டு முறை தான் தண்ணீர் வருகிறது... நீங்கள் பாக்கியசாலிகள்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X