விழுப்புரம், -விழுப்புரம் சி.இ.ஓ.,வுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கிருஷ்ணபிரியா. இவர் சில நாட்களாக சளி, இருமல், காய்ச்சல் தொற்றால் பாதிக்கப்பட்டார்.விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில், அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. டாக்டர்கள் அறிவுரைப்படி, அவர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.