கள்ளக்குறிச்சி,-உளுந்துார்பேட்டை அடுத்த பல்லவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் மூர்த்தி மனைவி ஆனந்தி. நிறைமாத கர்ப்பிணியான இவரை, நேற்று முன்தினம், இரவு 9:40 மணியளவில் எலவனாசூர்கோட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்சில் அழைத்துச் சென்றனர்.செல்லும் வழியிலேயே ஆனந்திக்கு பெண் குழந்தை பிறந்தது. பிரசவம் பார்த்த அவசரகால நுட்புநர் சரவணன், தாய், சேய் ஆகியோரை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார்.