மதுரை : மதுரையில் பா.ஜ., நகர், அணி நிர்வாகிகள் கூட்டம் தலைவர் சரவணன் தலைமையில் நடந்தது.மாநில துணைத் தலைவர் மகாலட்சுமி, முன்னாள் தலைவர்கள் சீனிவாசன், சசிராமன், ராஜரத்தினம், நிர்வாகிகள் ஹரிஹரன், பாலகிருஷ்ணன், அணி நிர்வாகிகள் கார்த்திக்பிரபு, சகாதேவன், சரவணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்தில் வார்டு வாரியாக ஈடுபட நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.