அரசு அலுவலகங்களில் மழை நீர் தேங்கி சுகாதார கேடு; பொதுமக்கள் அதிருப்தி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 டிச
2021
06:35

சிவகாசி : விருதுநகர் மாவட்டத்தில் அரசு அலுவலகங்களில் மழை நீர் தேங்கி சுகாதார கேட்டை ஏற்படுத்துவதால் இங்கு வரும் பொதுமக்கள் பெரும் அதிருப்தியில் உள்ளனர்.



மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி, தாலுகா, ஒன்றியம், போலீஸ் ஸ்டேஷன், மருத்துவமனை, கோட்டாட்சியர் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. தற்போது பெய்த மழையால் பெரும்பாலான அரசு அலுவலகங்களின் வளாகங்கள் முழுவதும் மழைநீர் தேங்கியுள்ளது. இங்கு தண்ணீர் வெளியேற நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் மழைநீர் சேகரிப்பும் முறையாக கடைபிடிக்க படாததால் தண்ணீர் தேங்குகிறது.



இதை முறைப்படுத்தினாலே வீணாக தேங்கி கொசு உற்பத்தியாகும் மழைநீர் பூமிக்கு அடியில் சென்று நிலத்தடி நீராக மாறும். தண்ணீரும் தேங்காது. இன்னும் சில அலுவலகங்களில் மழைநீருடன் கழிவுநீர் கலந்து சுகாதார கேடு ஏற்படுகிறது. பொதுமக்களுக்கு முன் உதாரணமாக இருக்க வேண்டிய அரசு அலுவலகமே இவ்வாறு இருப்பது பொதுமக்களை அதிருப்தி அடைய செய்துள்ளது.



நிறுவனங்கள், கடைகளில் கொசு உற்பத்தியாகும் வகையில் தண்ணீர் தேங்கி இருக்கிறதா என ஆய்வு செய்கிற அதிகாரிகளின் அலுவலகங்களிலேயே இந்த நிலைதான் உள்ளது.நடவடிக்கை எடுக்க வேண்டும்மழைக்காலங்களில் இயல்பாகவே ஏதாவது தொற்று நோய் வந்துவிடும். முன் உதாரணமாக இருக்க வேண்டிய அரசு அதிகாரிகளே அலட்சியமாக உள்ளனர். இதனால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர். எனவே அரசு அலுவலகங்களின் வளாகங்களில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.ராஜேஷ், சமூக ஆர்வலர், சிவகாசி.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X