தேசிய பசுமை தீர்ப்பாயம் கேரளாவுக்கு 'குட்டு': கழிவு கொட்டிய இடத்தில் அதிகாரிகள் ஆய்வு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

03 டிச
2021
07:40
பதிவு செய்த நாள்
டிச 03,2021 06:38

ஆனைமலை: பொள்ளாச்சி செமணாம்பதி அருகே, கேரள மாநில கழிவுகள் கொட்டப்பட்ட இடத்தில், மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர்.

கோவை மாவட்டம், பொள்ளாச்சி, செமணாம்பதி அருகிலுள்ள இரட்டைமடை பிரிவு பகுதியில், வனத்தையொட்டிய தனியார் தோட்டத்தில், கேரள மாநிலத்தில் இருந்து மருத்துவக்கழிவுகள், திடக்கழிவுகள் கொண்டு வந்து, குழி தோண்டி புதைக்கப்பட்டன.

இங்கு, 10 ஏக்கருக்கு மேல் குழி தோண்டி, பல நுாறு டன் கழிவுகள் புதைக்கப்பட்டன. ஏப்., 8ம் தேதி கழிவுகள் கொட்டிய, மூன்று டிப்பர் லாரிகள், ஒரு பொக்லைன் இயந்திரத்தை விவசாயிகள் சிறைபிடித்து வருவாய்த்துறையிடம் ஒப்படைத்தனர்.தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து, இந்த வழக்கை விசாரித்து, பல்வேறு உத்தரவுகளை வெளியிட்டுள்ளது.

தேசிய பசுமைத்தீர்ப்பாயம் உத்தரவு வருமாறு:கேரள சோதனைச்சாவடிச்சாவடிகளை கடந்து, அங்குள்ள அதிகாரிகளுக்கு தெரிந்து தான், தமிழகத்தில் கழிவுகள் கொண்டு வரப்படுகிறது. தமிழக பகுதிகளில், கேரள மாநில கழிவுகள் கொட்டப்படுவது பல ஆண்டுகளாக தொடர்ந்து அரங்கேறி வருகிறது.
கேரள அரசு இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். கேரள தலைமைச்செயலர், உள்ளாட்சி அமைப்புகளில், மருத்துவம் மற்றும் திடக்கழிவுகள் மேலாண்மை எவ்வாறு செயல்படுகிறது; கழிவுகள் முறையாக அழிக்கப்படுகிறதா என, விளக்கமளிக்க வேண்டும். கழிவு மேலாண்மையை முறையாக கையாளாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழக, கேரள எல்லைப்பகுதிகளிலுள்ள சோதனைச்சாவடிகளில் பணிபுரியும் இருமாநில அதிகாரிகளும், மருத்துவ மற்றும் இறைச்சி கழிவுகள் கொண்டு வரும் வாகனங்களை தடுத்து, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, உத்தரவில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விசாரணைநேற்று, கோவை மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் மணிமாறன் தலைமையிலான அதிகாரிகள், கழிவுகள் கொட்டிய தோட்டத்தில் ஆய்வு செய்து, மண், கழிவு மாதிரிகள் மற்றும் நீர் மாதிரிகளை சேகரித்தனர்.

சுற்றுச்சூழல் பொறியாளர் மணிமாறன் கூறுகையில், ''கேரள மாநிலம் திருச்சூர், பாலக்காடு நகராட்சி பகுதிகளின் திடக்கழிவுகள், செமணாம்பதி அருகே கொட்டப்பட்டுள்ளன. இங்கு மருத்துவ கழிவுகள் உள்ளதா, இதுவரை கொட்டப்பட்ட கழிவுகளால் நிலம், நீர் எந்த அளவுக்கு மாசடைந்துள்ளது என கண்டறிய மாதிரி சேகரிக்கப்பட்டுள்ளன. ''மாதிரி முடிவுகள் வந்ததும், தேசிய பசுமைத்தீர்ப்பாயத்துக்கு அனுப்பப்படும்,'' என்றார்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (13)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
03-டிச-202118:57:31 IST Report Abuse
அப்புசாமி போராட்டம் நடத்தலாமே...
Rate this:
Cancel
03-டிச-202118:55:33 IST Report Abuse
அப்புசாமி கொண்டு வந்து கொட்டுற டிரைவர்களையும், கூட வர்ர ஆளுங்களையும் சிறைப் பிடியுங்க. மினிமம் 10 வருஷம் உள்ளே தள்ளுங்க. எங்கே அடிச்சா எங்கே வலிக்கும்னு தெரிஞ்சுக்கோங்க.
Rate this:
Cancel
03-டிச-202117:28:50 IST Report Abuse
Ram Pollachi ஏமாந்து காட்டை விற்றுவிட்டு இன்று வயிற்றிலும் வாயிலும் அடித்து என்ன பிரயோஜனம்? சர்ச்சைக்குரிய நிலத்தை அரசுடைமை ஆக்குவது தான் நிரந்தர தீர்வு. கலெக்டர் ஐயா கையில் முடிவு இருக்கிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X