சிவகாசி : சிவகாசி பகுதியில் பெய்த மழையால் சுக்கிரவார்பட்டி, நிறைமதி, அனுப்பன்குளம், தாயில்பட்டி, வெள்ளையாபுரம், ராமச்சந்திராபுரம், நடுவபட்டி உள்ளிட்ட கிராமங்களில் 36 வீடுகள் சேதமடைந்தது. பகுதி சேதமடைந்த வீடுகளுக்கு ரூ.4 ஆயிரத்து 100, முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்கு ரூ.5 ஆயிரம் என 32 வீடுகளுக்கு ரூ.1 லட்சத்து 36 ஆயிரத்து 200 நிவாரண தொகை தாசில்தார் ராஜ்குமார் உத்தரவுபடி வீட்டு உரிமையாளர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது. 'மீதமுள்ள சேதமடைந்த வீடுகளுக்கு விரைவில் நிவாரணம் வழங்கப்படும்,' என தாசில்தார் தெரிவித்தார்.