'சீசன் டிக்கெட்' பயணியருக்கு விரைவு ரயிலில் அனுமதி தேவை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 டிச
2021
22:05

நகரி : சென்னை - திருப்பதி செல்லும் விரைவு ரயில்களில், சீசன் டிக்கெட் பயணியருக்கு அனுமதி வழங்க வேண்டும் என, பயணியர் எதிர்பார்கின்றனர்.



சென்னை, செங்கல்பட்டு ஆகிய இடங்களில் இருந்து திருவள்ளூர், அரக்கோணம், திருத்தணி, ஏகாம்பரகுப்பம், புத்துார், ரேணிகுண்டா வழியாக திருப்பதி ரயில் நிலையம் வரை காச்சிகுடா, கருடாத்ரி, சப்தகிரி ஆகிய சிறப்பு விரைவு மற்றும் விரைவு ரயில்கள் இயக்கப்படுகின்றன. கொரோனா தொற்று காரணமாக முன்பதிவு செய்த பயணியர் மட்டுமே, விரைவு ரயிலில் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டது.



நேற்று முதல் சென்னை - திருப்பதி செல்லும் சப்தகிரி விரைவு ரயிலில், முன்பதிவு செய்யாத பயணியர், டிக்கெட் பெற்று பயணம் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டது. இந்த ரயிலில் சீசன் டிக்கெட் வாங்கி பயணம் செய்யவும் அனுமதிக்கப்பட்டது.



ஆனால், சென்னை - திருப்பதி செல்லும் கருடாத்ரி சிறப்பு ரயில், செங்கல்பட்டில் இருந்து அரக்கோணம் ரேணிகுண்டா வழியாக காச்சிகுடா செல்லும் சிறப்பு ரயில்களில், உடனடி டிக்கெட் வாங்கியோர் மற்றும் சீசன் டிக்கெட் பெற்றவர்கள் பயணம் செய்ய அனுமதிக்கப்படவில்லை.



மேற்கண்ட விரைவு ரயில்களில் உடனடி டிக்கெட் மற்றும் சீசன் டிக்கெட் பயணியர் பயணம் செய்ய அனுமதி வழங்க வேண்டும் என, பயணியர் எதிர்பார்க்கின்றனர்.மேலும், பயணியர் கூறியதாவது:கொரோனா தொற்று காரணமாக, 2020 ஏப்., 25ம் தேதி முதல் சென்னையில் இருந்து திருவள்ளூர், அரக்கோணம், திருத்தணி, நகரி, புத்துார் வழியாக திருப்பதி வரை செல்லும் ஐந்து மின்சாரம் ரயில்கள் இன்று இயக்கப்படவில்லை.



தெற்கு ரயில்வே நிர்வாகம் வாயிலாக இயக்கப்படும் இந்த மின்சார ரயில்கள், எதற்காக இயக்கப்படவில்லை.சென்னை - சூளூர்பேட்டை, சென்னை - நெல்லுார் ஆகிய மின்சார ரயில்கள் மட்டும் இயக்கப்பட்டு வருகின்றன.கோவில் நகரமான திருப்பதிக்கு, தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் திருப்பதி ரயில் நிலையத்திற்கு, மின்சார ரயில்கள் இயக்கினால் பக்தர்கள் மாணவர்கள் பயனடைவர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X