வீட்டை ஒப்படைப்பதில் தாமதம்; இழப்பீடு வழங்காமல் அலட்சியம்; கட்டுமான நிறுவனத்துக்கு 'வாரன்ட்'
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 டிச
2021
22:16

சென்னை : வீட்டை ஒப்படைப்பதில் தாமதம் செய்ததுடன், இழப்பீடும் வழங்காமல் அலட்சியம் காட்டிய கட்டுமான நிறுவனம் மீது, வருவாய் சட்டப்படி 'வாரன்ட்' பிறப்பிக்க, செங்கல்பட்டு கலெக்டருக்கு, ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டது.



செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் அடுத்த புதுப்பாக்கம் பகுதியில், தனியார் நிறுவனம் குடியிருப்பு திட்டத்தை அறிவித்தது. இதில் வீடு வாங்க, ஆனந்தன், ராமநாதன் ஆகியோர் தனித்தனியாக பணம் செலுத்தினர்.இவர்களுக்கு ஒப்பந்தப்படி கட்டுமான நிறுவனம் வீட்டை ஒப்படைக்கவில்லை என, கூறப்படுகிறது.இது தொடர்பாக பணம் செலுத்திய இருவரும், ரியல் எஸ்டேட் ஆணையத்தில் முறையிட்டனர்.விசாரித்த ஆணையம், இழப்பீடு வழங்க, 2020ல் தனித்தனி உத்தரவுகளை பிறப்பித்தது.



இந்த உத்தரவுகளை கட்டுமான நிறுவனம் செயல்படுத்தாத நிலையில், மீண்டும் ரியல் எஸ்டேட் ஆணையத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது.விசாரணை அலுவலர் சரவணன் பிறப்பித்த உத்தரவு:வீடு ஒப்படைப்பில் தாமதமானது உறுதியான நிலையில், இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது. இதை செயல்படுத்த கட்டுமான நிறுவனம் மறுப்பது தெரிகிறது.எனவே, அந்த கட்டுமான நிறுவனம் மீது வருவாய் மீட்பு சட்டத்தின் அடிப்படையில், 'வாரன்ட்' பிறப்பித்து, செங்கல்பட்டு கலெக்டர் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்படுகிறது.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X