சென்னை : சென்னை கவுரிவாக்கத்தில், வசந்த் அண்ட் கோ 100வது கிளை திறப்பு விழா, இன்று கோலாகலமாக துவங்குகிறது.
குறைந்த விலையுடன் உத்தரவாதம், பரிசுத் திட்டங்கள் என, புதிய அணுகுமுறையில் வாடிக்கையாளர்களை கவர்ந்தது வசந்த் அண்ட் கோ நிறுவனம். இந்நிறுவனம் தனது 100வது கிளையை, சென்னை கவுரிவாக்கத்தில் இன்று திறக்கிறது.இந்த திறப்பு விழா சலுகையாக, அனைத்து வசந்த் அண்ட் கோ கிளையிலும், எல்.இ.டி., டிவி, பிரிட்ஜ், வாஷிங் மிஷன் உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்களின், முதல் 100 விற்பனைக்கு சலுகைகள் வழங்கப்பட உள்ளதாக அறிவித்துள்ளது.அதேபோல், 5,001 ரூபாய் முதல் 15 ஆயிரம் ரூபாய், 50 ஆயிரம் ரூபாய், 75 ஆயிரம் ரூபாய், 1 லட்சம் ரூபாய் வரை பொருட்கள் வாங்குபவர்களுக்கு, பல்வேறு சலுகைகள் வழங்கப்பட உள்ளன.வட்டியில்லா தவணை முறையிலும், பொருட்கள் விற்பனை செய்யப்பட உள்ளன.