மாற்று பாதையில் பாயும் வெள்ளம்; சொரக்காய்பேட்டையில் அச்சம் | திருவள்ளூர் செய்திகள் | Dinamalar
மாற்று பாதையில் பாயும் வெள்ளம்; சொரக்காய்பேட்டையில் அச்சம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

03 டிச
2021
22:17

பள்ளிப்பட்டு : கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணையை தாண்டி பாயாமல், ஆற்றின் கரையை உடைத்துக்கொண்டு மாற்றுப்பாதையில் வெள்ளம் பாய்வதால், கிராமத்தினர் அச்சத்தில் உள்ளனர்.



பள்ளிப்பட்டு அருகே உருவாகும் கொசஸ்தலை ஆறு, பெருமாநல்லுார், சொரக்காய்பேட்டை, சாமந்தவாடா வழியாக பாய்ந்து செல்கிறது.ஆற்றின் குறுக்கே பள்ளிப்பட்டு மற்றும் சொரக்காய்பேட்டை பகுதியில் தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. சொரக்காய்பேட்டை தடுப்பணைக்கு பக்கவாட்டில் ஆற்றின் கரையை உடைத்துக்கொண்டு வெள்ளம், மாற்றுப்பாதையில் பாய்ந்து வருகிறது.

இதனால், விவசாய நிலங்களில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது.தடுப்பணைக்கு முன் மாற்றுப்பாதையில் திரும்பும் வெள்ளம், தடுப்பணையை தாண்டி, மீண்டும் ஆற்றில் கலக்கிறது.தடுப்பணை வழியாக வெள்ளம் பாயாமல், கிராமத்தின் பக்கமாக திரும்பிஉள்ளதால், பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

கரையோரத்தில் வசிக்கும் ஒரு குடும்பத்தினர், வீட்டை இடித்து, அதில் உள்ள சிமென்ட் பிளாக் கற்களை பெயர்த்துக்கொண்டு, வேறு இடத்திற்கு குடிபெயர்ந்துவிட்டனர்.ஆற்றின் இந்த திசை மாற்றத்தால், சொரக்காய்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியின் வகுப்பறை கட்டடமும் சேதம் அடைந்தது குறிப்பிடத்தக்கது.

 

Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X