நெல்லிக்குப்பம் - கொண்டங்கி இணைப்பு சாலை சீரமைப்பு | காஞ்சிபுரம் செய்திகள் | Dinamalar
நெல்லிக்குப்பம் - கொண்டங்கி இணைப்பு சாலை சீரமைப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

03 டிச
2021
22:29

திருப்போரூர் : திருப்போரூர் ஒன்றியம் நெல்லிக்குப்பம் கிராமத்தில் இருந்து கொண்டங்கி வழியாக மறைமலை நகர் செல்ல நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான சாலை உள்ளது.

வெங்கூர், கொண்டங்கி, மருதேரி உட்பட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள், இந்த சாலையை பயன்படுத்தி, மறைமலை நகர், சிங்கபெருமாள் கோவில் போன்ற இடங்களுக்கு செல்கின்றனர்.மூன்று ஆண்டுகளுக்கு முன், 45 லட்சம் ரூபாய் மதிப்பில், புதிய சாலை அமைக்கப்பட்டது.இங்குள்ள கொண்டங்கி ஏரி, பருவ மழையால் நிரம்பி உபரி நீர் வெளியேறியது. நெல்லிக்குப்பம் - கொண்டங்கி இணைப்பு சாலையில் குறுக்கே, வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

இதனால் இச்சாலையில் 300 மீட்டர் வரை முற்றிலும் சேதமடைந்து, போக்குவரத்து பாதிக்கப்பட்டது.நெல்லிக்குப்பம் ஊராட்சி தலைவர் பார்த்தசாரதி, மேலையூர் ஊராட்சி தலைவர் கோமதி ஆகியோர் இணைந்து, மேற்கண்ட சாலையை ஜே.சி.பி., இயந்திரம் மற்றும் கூலி ஆட்கள் வைத்து தற்காலிகமாக சீரமைத்து உள்ளனர்.மழைக்காலத்தில் இதுபோன்ற நிலை 20 ஆண்டுகளாக ஏற்பட்டு வருவதாகவும், இங்கு மேம்பாலம் அமைக்க நெடுஞ்சாலைத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இரு ஊராட்சி தலைவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

 

Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X