மணலிபுதுநகர் : இணைப்பு கால்வாயில், நீரோட்டத்திற்கு தடையாக இருந்த குப்பை கழிவுகளை துாய்மை பணியாளர்கள், சாதுர்யமாக அகற்றினர்.
சென்னையில், கன மழைக்கு அனைத்து கால்வாய்களிலும் நீர்வரத்து அதிகரித்தது. கொசஸ்தலை ஆற்றிலிருந்து, பின்னோக்கி ஏறிய வெள்ளநீரால், மணலிபுதுநகர், இணைப்பு கால்வாய் வழியாக வெள்ளம் ஆர்ப்பரித்தது.தற்போது, கொசஸ்தலை ஆற்றிலும், இணைப்பு கால் வாயிலும், நீரோட்டம்குறைந்து உள்ளது. இருப்பினும், தண்ணீர் வேகமாக சென்றுக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில், மணலி புதுநகர், இணைப்பு கால்வாயில், நீரோட்டத்திற்குதடையாக அடைப்பு ஏற்படுத்திய குப்பையை, மாநகராட்சி துாய்மை பணியாளர்கள், தரைப்பாலத்தில் இருந்து, கம்பி வலை மூலம் கரைக்கு இழுத்து, அவற்றை லாவகமாக அகற்றினர். இதனால், இணைப்பு கால்வாயில் நீர் தங்கு தடையின்றி செல்கிறது.