ரயில்வே சாலையில் விபத்து அபாயம் | சென்னை செய்திகள் | Dinamalar
ரயில்வே சாலையில் விபத்து அபாயம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

03 டிச
2021
22:32

வில்லிவாக்கம் : வில்லிவாக்கம் சந்தை அருகே, மழை நீர் தேங்கியுள்ள ரயில்வே சாலையில், மின்சார கேபிள்களால் விபத்து ஏற்படும் அபாயம் நிலவுகிறது.



அண்ணா நகர் மண்டலம், 94வது வார்டு, வில்லிவாக்கம் சந்தை அருகில், ரயில்வே சாலை உள்ளது. இந்த சாலை முழுதும் போக்குவரத்துக்கு லாக்கற்ற நிலையில் உள்ளது.இவ்வழியாக தினமும், ஆயிரக்கணக்கான மக்கள் கடந்து செல்கின்றனர்.கடந்த சில நாட்கள் பெய்த கனமழையால், இச்சாலை முழுதும் தண்ணீர் தேங்கி உள்ளது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிடம் புகார் அளித்தால், ரயில்வேக்கு சொந்தமான இடம் என, அலட்சியமாக பதில் அளிப்பதாக, பொதுமக்கள் புலம்பி வருகின்றனர்.

மழை நீர் தேங்கியுள்ள சாலையில் மின்சார கேபிள்கள் தண்ணீரில் படும் படி உள்ளன. இதனால், மின்சாரம் தாக்கி உயர்பலி ஏற்படவும் வாய்ப்புள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், ரயில்வே சாலையை ஆய்வு செய்து, விபத்து ஏற்படும் முன், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து உள்ளது.

 

Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X