தி.நகரில் என்ன செய்ய போறீங்க? மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் கேள்வி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 டிச
2021
22:37

சென்னை : மாம்பலம், தி.நகரில் நிரந்தர வெள்ள தடுப்புக்கு, என்னென்ன பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டு உள்ளது என, மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் கேள்வி எழுப்பியுள்ளது.



வர்த்தகம் பாதிப்பு




தி.நகர், மாம்பலம், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளின் வடிகாலாக மாம்பலம் கால்வாய் உள்ளது. வள்ளுவர் கோட்டம் அருகே துவங்கும் இந்த கால்வாய், 5.8 கி.மீ., பயணித்து நந்தனம் அருகே அடையாறு ஆற்றில் கலக்கிறது. முந்தைய அ.தி.மு.க., ஆட்சியில் 64 கோடி ரூபாய் செலவில் மாம்பலம் கால்வாய் புனரமைக்கப்பட்டது. இதுமட்டுமின்றி மாம்பலம், தி.நகர் பகுதிகளில் 13 கோடி ரூபாய் செலவில் மழைநீர் வடிகால்கள் கட்டப்பட்டன.



இந்த வடிகால்களை, மாம்பலம் கால்வாயில் முறையாக இணைக்காததால், தி.நகர், மாம்பலம் பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை, வர்த்தகம் இந்த மழைக்கு கடுமையாக பாதித்தது. அரங்கநாதன், மேட்லி சுரங்கப் பாதைகளும் மூடப்பட்டன. இதுகுறித்த செய்தி, நம் நாளிதழில் 28ம் தேதி விரிவான படங்களுடன் வெளியானது.



இப்பிரச்னையை மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தற்போது கையில் எடுத்துள்ளது. மாம்பலம், தி.நகரில் வரும் காலங்களில் நிரந்தர வெள்ள தடுப்புக்கு என்னென்ன பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது என, சென்னை மாநகராட்சியிடம் கேள்வி எழுப்பட்டு உள்ளது.இதுகுறித்து, மாநில பேரிடர் மேலாண்மை ஆணைய அதிகாரி ஒருவர் கூறியதாவது:மழை வெள்ள பாதிப்புகளை மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் கண்காணித்து வருகிறது.



கேள்வி




அதன் அடிப்படையில், சென்னை மாநகராட்சியின் 133 முதல் 135வது வட்டத்திற்கு உட்பட்ட மேற்கு மாம்பலத்தின் பல்வேறு பகுதிகள், 136வது வட்டத்திற்குட்பட்ட தி.நகர், பசுல்லா சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் தேங்கியது. இதேபோல மேலும் ஆறு இடங்களிலும் வெள்ளம் சூழ்ந்தது. இப்பகுதிகளில் இயல்பு வாழ்க்கை பாதிக்காமல் இருப்பதற்கு, வரும் காலங்களில் மேற்கொள்ளவுள்ள நிரந்தர வெள்ள தடுப்பு பணிகள் குறித்து, சென்னை மாநகராட்சியிடம் விளக்கம் கேட்கப்பட்டு உள்ளது. அங்கிருந்து விரைவில் விரிவான அறிக்கை வரும் என, எதிர்பார்க்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Siva Kumar - chennai,இந்தியா
05-டிச-202105:06:20 IST Report Abuse
Siva Kumar கவலையே படாதீங்க நாங்க இருக்கற ரோட்டையும் கூறு போட்டு வித்துருவோம். பெரிய பெரிய கட்டடங்கள் மட்டுமே கட்டப்படும். ரோடுகள் இருக்காது. மக்களுக்கு ஹெலிகாப்டர் சேவை கொண்டு வந்துவிடுவோம். ரோடை இருக்குதுனாலே தான் தான் வருது மக்களால் ரோட்டில் நடமாட முடிவதில்லை ரோடே இல்லேன்னா தண்ணியே வராது.
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
05-டிச-202104:50:43 IST Report Abuse
J.V. Iyer மழைக்காலத்தில் படகு விடலாம். மக்களுக்கு நீச்சல் கற்றுக்கொடுக்கலாம். தண்ணீரில் குடும்பம் நடத்துவைத்து எப்படி என்ற பயிற்சி கொடுக்கலாம். தண்ணீர் புகுந்த வீட்டிற்கு வீட்டுவரி அதிகம் போடலாம். வந்து பார்க்கும் அமைச்சர்களுக்கு எப்படி வணக்கம் போட்டுவைத்து என்று மக்களுக்கு சொல்லிக்கொடுக்கலாம்.
Rate this:
Cancel
04-டிச-202108:37:25 IST Report Abuse
அப்புசாமி பொறுங்க சாமி...உலக வங்கி 9000 கோடி கடன் குடுக்கப் போகுது. நாங்க ஆட்டையப் போட்டது போக மீதிப் பணம் இருந்தா ஏதாவது கட்டுறோம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X