கள்ளிக்குடி : தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் வேன் டிரைவர் மகேந்திரன் 36. இவருக்கும், மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே புதுப்பட்டி மாரீஸ்வரிக்கும் 26, இரு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
இவர்களுக்கு ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது. உடல் நலம் பாதிப்பால் மாரீஸ்வரி தனது தந்தை வீட்டில் தங்கியிருந்தார். நேற்று(டிச.,3) குழந்தையுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். உடல்நலம் பாதிப்பால் இம்முடிவை எடுத்தாரா அல்லது வேறு காரணங்கள் உண்டா என கள்ளிக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.