கொரோனா வைரஸ் பரவல் குறைந்ததை அடுத்து தமிழக அரசு ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்துள்ளது. பள்ளிகளில் மாணவர்கள் 'ஷிப்ட்' முறையில் வர வேண்டும். உரிய நோய் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும்.
சமூக இடைவெளியுடன் மாணவர்களை அமர வைத்து பாடம் கற்பிக்க வேண்டும் என கல்வித்துறை வலியுறுத்தியுள்ளது.இந்நிலையில் தென்ஆப்ரிக்கா, சிங்கப்பூர் உள்ளிட்ட 12 நாடுகளில் 'ஒமைக்ரான்' வைரஸ் பரவல் அதிகரித்துள்ளன. இந்நோய் தாக்கம் ஏற்படாமல் மாணவர்களை காக்கும் நோக்கில் கடுமையான கெடுபிடிகளை பள்ளிகளுக்கு கல்வித்துறை விதித்துள்ளது.
அதன்படி ஒன்று முதல் 8 ம் வகுப்பு வரை சுழற்சி முறையில் மட்டுமே வகுப்புகள் நடத்த வேண்டும். நேரடியாக மற்றும் ஆன்லைனில் வகுப்பு நடத்தலாம். பள்ளிக்குள் நுழையும் அனைத்து மாணவர்களையும் ' தெர்மல் ஸ்கேனர்' கருவி கொண்டு நன்கு பரிசோதித்த பின்னரே அனுமதிக்க வேண்டும்.அதிக வெப்பநிலை உள்ள மாணவர்களை பள்ளிக்குள் அனுமதிக்க கூடாது.
ஆசிரியர்கள் முககவசம் அணிந்து மாணவர்களுக்கு 'ரோல் மாடலாக' இருக்க வேண்டும். மாணவர்களும் முக கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும். பள்ளி, வகுப்பறையில் சமூக இடைவெளி கட்டாயம். பள்ளி நீச்சல் குளங்களை மூட வேண்டும். இறைவணக்க கூட்டம், விளையாட்டு, கலாசார நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.என்.எஸ்.எஸ்., மற்றும் என்.சி.சி., சார்ந்த கூட்டங்களுக்கு அனுமதி இல்லை என அனைத்து அரசு, உதவி பெறும், தனியார் பள்ளிகளுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இது குறித்த சுற்றறிக்கைகள் பள்ளிகளுக்கு முதன்மை கல்வி அலுவலர் மூலம் வழங்கப்படும்.சிவகங்கை, டிச.4-'ஒமைக்ரான்' வைரஸ் பரவலை தடுத்து மாணவர்களை காக்கும் பொருட்டு அரசு விதித்த நோய் தடுப்பு விதிமுறைகளை கட்டாயம் அரசு, தனியார், உதவி பெறும் பள்ளிகள் கடைபிடிக்க வேண்டும் என கல்வித்துறை கெடுபிடி விதித்துள்ளது.