சிவகங்கை : திருப்புவனம் அருகேயுள்ள கீழராங்கியம் காலனியில் தேசிய மண்வள திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டது. பயிற்சியில் பங்கேற்ற விவசாயிகளுக்கு இடு பொருட்கள் வழங்கப்பட்டது.
பசுமைப்போர்வைக்கான திட்டத்தின் கீழ் மேலசொரிகுளம், மழவராயனேந்தல், குருந்தங்குளம், விவசாயிகளுக்கு தேக்கு, செம்மரம் உள்ளிட்ட 200 மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டது.வேளாண் வளர்ச்சித்திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட கிராமங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் மரக்கன்றுகளை வேளாண் இணை இயக்குநர் வெங்கடேஸ்வரன் வழங்கினார்.
உதவி இயக்குநர் கண்ணன், தரக்கட்டுப்பாடு உதவி இயக்குநர் பரமேஸ்வரன், துணை வேளாண் அலுவலர் முனியசாமி, உதவி வேளாண் அலுவலர்கள் ரகுபதி, ராஜா, அட்மா திட்டப்பணி யாளர்கள் பங்கேற்றனர்.