இந்த உற்ஸவம் டிச.,11 முதல் 19 வரை நடக்கிறது. இந்நாட்களில் மாலை 6:00 மணிக்கு அம்மன் உற்ஸவ சன்னதியில் தைலகாப்பு மற்றும் தீபாராதனை நடக்கும். பின் அங்கிருந்து புறப்பாடாகி ஆடி வீதிகளில் அம்மன் வலம் வருவார். டிச.,18 கோ ரதத்திலும், டிச.,19 கனக தண்டியலிலும் ஆடி வீதிகளில் எழுந்தருளுகிறார். டிச.,20 திருவாதிரை அன்று பொன்னுாஞ்சல் மண்டபத்தில் இருந்து சுவாமி ரிஷப வாகனத்திலும், அம்மன் மர சிம்மவாகனத்திலும் எழுந்தருளி ஆடி வீதிகளில் வலம் வருவர்.
திருவெண்பா உற்ஸவம்
இந்த உற்ஸவம் டிச.,11 முதல் 20 வரை நுாறு கால் மண்டபம் அருகில் நடராஜர் சன்னதி முன் நடக்கிறது. டிச.,20 பொன்னுாஞ்சல் அன்று இரவு திருஞானசம்பந்தர் சுவாமி சன்னதியில் திருவெண்பா பாடி முடிந்ததும் சுவாமி ரிஷப வாகனத்திலும், அம்மன் மர சிம்மவாகனத்திலும் ஆடி வீதிகளில் வலம் வருவர்.
ஆருத்ரா தரிசனம்
டிச.,19 இரவு முதல் டிச.,20 அதிகாலை வரை நடராஜருக்கு அபிேஷகம் நடக்கும். இக்கோயிலில் மட்டும்தான் பஞ்சலோகத்திலான பஞ்ச சபை நடராஜக்குரிய ஐந்து உற்ஸவ சிலைகள் உள்ளன. அபிேஷக பொருட்களை கோயில் உள்துறை அலுவலகத்தில் டிச.,19 இரவு 7:00 மணிக்குள் பக்தர்கள் வழங்கலாம் என நிர்வாக அதிகாரி செல்லத்துரை தெரிவித்துள்ளார்.