மதுரை : மேல்மருவத்துார் இருமுடி தைப்பூச திருவிழாவை முன்னிட்டு வைகை, பொதிகை, கொல்லம், அந்தியோதயா விரைவு ரயில்கள் டிச., 13 முதல் 2022 ஜன., 19 வரை நின்று செல்லும்.
மதுரை - சென்னை வைகை ரயில்கள்(12635/12636), சென்னை - செங்கோட்டை பொதிகை ரயில்கள் (12661/12662), தென்காசி வழியாக இயக்கப்படும் சென்னை- கொல்லம் ரயில்கள்(16101/16102), தாம்பரம்- நாகர்கோவில் அந்தியோதயா ரயில்கள் (16191/16192)
ஆகியவை டிச., 13 முதல் ஜன., 19 வரை நின்று செல்லும்.டிச., 19, 26, 2022 ஜன., 2, 9, 16ல் ராமேஸ்வரத்தில் புறப்படும் புவனேஸ்வர் ரயில்(20895), டிச., 17, 24, 31, ஜன., 7, 14 ல் புவனேஸ்வரில் புறப்படும் ராமேஸ்வரம் ரயில்(20896), டிச. 15, 22, 29, ஜன., 5, 12, 19 நாட்களில் மும்பை லோக்மான்யதிலக்கில் புறப்படும்
மதுரை ரயில்(22101), டிச., 17, 24, 31, ஜன., 7, 14 மதுரையில் புறப்படும் மும்பை லோக்மான்யதிலக் ரயில்(22102) மேல்மருவத்துாரில் நிற்கும்.டிச., 15, 22, 29, ஜன., 5, 12, 19 ல் ராமேஸ்வரத்தில் புறப்படும் பனாரஸ் ரயில்(22535), டிச., 19, 26, ஜன., 2, 9, 16 ல் பனாரஸில் புறப்படும்
ராமேஸ்வரம் ரயில்(22536), டிச., 17, 19, 24, 26, 31, ஜன., 2, 7, 9, 14, 16 சென்னையில் புறப்படும் மதுரை ரயில் (22623), டிச., 16, 18, 23, 25, 30, ஜன., 1, 6, 8, 13, 15 மதுரையில் புறப்படும் சென்னை ரயில் (22624) மேல்மருவத்துாரில் நின்று செல்லும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.