மதுரை:''கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்கள், ஒரு வாரத்திற்குள் முதல் தவணையாவது செலுத்த வேண்டும். தவறினால் பொது இடங்களில் அனுமதி மறுக்கப்படும்,'' என மதுரை கலெக்டர் அனீஷ்சேகர் கூறினார்.
அவர் அளித்த பேட்டி:மாநில சராசரியை விட, மதுரை மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்தியவர் எண்ணிக்கை குறைவு. இதுவரை தடுப்பூசி செலுத்தாதவர்கள் ஒரு வார காலத்திற்குள், முதல் தவணை தடுப்பூசியாவது செலுத்த வேண்டும். இன்று மற்றும் டிசம்பர் 11ல் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடக்கின்றன. அதில் தடுப்பூசி போடலாம். தவறுவோருக்கு தியேட்டர் உள்ளிட்ட பொது இடங்களில் அனுமதி மறுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
தடுப்பூசி செலுத்தாமல், பொது இடங்களுக்கு செல்வோருக்கு இன்று முதல் எச்சரிக்கை விடப்படும். ஒரு வாரத்திற்கு பின்னும், தடுப்பூசி செலுத்தியிருக்காத பட்சத்தில் அனுமதி மறுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.