வீரப்பட்டியில் 'கிட்னி' பாதிப்பால் இறப்பா; சுகாதார துணை இயக்குனர் விளக்கம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 டிச
2021
00:25


சிவகங்கை : சிவகங்கை ஒன்றியம் கீழப்பூங்குடி ஊராட்சி வீரப்பட்டியில் கிட்னி பாதிப்பால் அதிகம் பேர் இறந்ததாக மக்கள் புகார் அளித்ததை தொடர்ந்து மருத்துவ குழுவினர் நேற்று 1,070 பேருக்கு பரிசோதனை செய்தனர்.



இக்கிராமத்தில் உள்ள 285 குடியிருப்புகளில் 1,070 பேர் வசிக்கின்றனர். இவர்களில் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் 689 பேர் உள்ளனர். இக்கிராமத்திற்கு வினியோகம் செய்யப்படும் குடிநீரை பருகுவதின் மூலம் 'கிட்னி' பாதிப்பிற்கு உள்ளாகின்றனர் என மக்கள் புகார் தெரிவித்தனர்.2020ல் 17 பேரும், 2021 நவ., வரை 5 பேர் என 22 பேர் வரை கிட்னி பாதிப்பால் இறந்ததாக கலெக்டரிடம் புகாரளித்தனர். கலெக்டர் மதுசூதன் ரெட்டி உத்தரவுப்படி நேற்று மருத்துவ இணை இயக்குனர் இளங்கோ மகேஸ்வரன், சுகாதார துணை இயக்குனர் ராம்கணேஷ், சிவகங்கை பி.டி.ஓ., மற்றும் குடிநீர் வடிகால் வாரிய பொறியாளர்கள் வீரப்பட்டியில் குடிநீர் ஆதாரங்களை பரிசோதித்தனர். 'கிட்னி' பாதிப்பால் 4 பேர் மட்டுமே இறப்புசுகாதார துணை இயக்குனர் ராம்கணேஷ் கூறியதாவது,



வீரப்பட்டியில் 3 ஆழ்துளை கிணறு, மேல்நிலை தொட்டி, தனியார் வீடுகளில் வைத்துள்ள குடிநீரை குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் பரிசோதனை செய்ததில், 'கிட்னி' பாதிப்பிற்கான எவ்வித அறிகுறியும் மக்கள் பருகும் நீரில் இல்லை. அங்குள்ளவர்கள் 'கிட்னி' பாதிப்பால் தான் இறந்தார்கள் என்பதற்கான மருத்துவ சான்று ஏதும் இல்லை.மருத்துவ குழு பரிசோதனையில் கடந்த 2 ஆண்டில் கணபதி 49, பாலசுப்பிரமணியன் 29, முருகேசன் 45, பஞ்சு 51 ஆகிய 4 பேர் கிட்னி பாதிப்பால் இறந்தது உறுதியானது.



மற்ற 18 பேரும் கிட்னி பாதிப்பால் இறக்கவில்லை. இருப்பினும் வீரப்பட்டியில் 3 மருத்துவ குழுக்களை நியமித்து ரத்தம், சிறுநீர் பரிசோதனை செய்ததில் கிட்னி பாதிப்பு இருப்பதாக தெரியவில்லை. அப்படி யாருக்கேனும் 'கிட்னி' பாதிப்பிற்கான அறிகுறிகள் இருந்தால் அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்படும், என்றார்.

 

Advertisement
மேலும் சிவகங்கை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X