கூடுதல் பேருந்து இயக்கம் மாணவர்களுக்கு விழிப்புணர்வு | சிவகங்கை செய்திகள் | Dinamalar
கூடுதல் பேருந்து இயக்கம் மாணவர்களுக்கு விழிப்புணர்வு
Advertisement
 

பதிவு செய்த நாள்

04 டிச
2021
00:37

காரைக்குடி : காரைக்குடியில், பஸ்சின் படிக்கட்டில் பயணம் செய்யும் மாணவர்களுக்காக அரசு போக்குவரத்து கழகம், சார்பில் கூடுதல் பஸ் இயக்கப்பட்டதுடன் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.



காரைக்குடியில் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் போதிய பஸ் வசதி இல்லாமல் பஸ்சின் படிக்கட்டில் பயணம் செய்வது தொடர்கதையாக நடந்து வந்தது. இதுகுறித்து, தினமலர் நாளிதழில் செய்தி வெளிவந்தது. அதனைத் தொடர்ந்து நேற்று பழைய பஸ் ஸ்டாண்டில் மாணவர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த, பள்ளி கல்லூரி நேரத்திற்கேற்ப கூடுதல் பேருந்து இயக்கப்பட்டது.

மேலும், மாணவ, மாணவிகள் படிகளில் பயணம் செய்வதை தவிர்த்திட அறிவுரை வழங்கப்பட்டதுடன், வரிசையில் பேருந்துகளில் ஏறுவதற்கும் அறிவுறுத்தப்பட்டது. மோட்டார் வாகன ஆய்வாளர் ஆனந்த், போக்குவரத்து கிளை மேலாளர் சண்முகசுந்தரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X