சிறப்பு தொழிற்கடன் முகாம் | மதுரை செய்திகள் | Dinamalar
சிறப்பு தொழிற்கடன் முகாம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

04 டிச
2021
00:38

மதுரை : மதுரை மடீட்சியா வளாகத்திலுள்ள தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தில் சிறப்பு தொழிற்கடன் முகாம் டிச. 8 முதல் 15 வரை காலை 10:00 முதல் மாலை 6:00 மணி வரை நடக்கிறது.

முதல் தலைமுறை தொழில்முனைவோர் திட்டம் மற்றும் வேலையில்லா இளைஞர்களுக்கான கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் உற்பத்தி தொழில் செய்வதற்கு கடன் பெறலாம். நடைமுறை கட்டணத்தில் 50 சதவீதம், வட்டியில் 6 சதவீதம் தள்ளுபடி உண்டு.

நடைமுறை மூலதனத்திற்கும் கடன் தரப்படும். கடன் மதிப்பீட்டில் 25 சதவீதம் அரசு மானியம், எஸ்.சி., எஸ்.டி. மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு 35 சதவீதம் மானியம் வழங்கப்படும் என முதலீட்டு கழக கிளை மேலாளர் பாஸ்கரன் தெரிவித்துள்ளார். தொடர்புக்கு : 0452 - 253 3331.

 

Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X