கொசு வலைக்குள் உட்கார்ந்து உறுப்பினர்கள் நுாதன போராட்டம் | திருப்பூர் செய்திகள் | Dinamalar
கொசு வலைக்குள் உட்கார்ந்து உறுப்பினர்கள் நுாதன போராட்டம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

04 டிச
2021
00:44

அவிநாசி:கொசு வலைக்குள் அமர்ந்து போராட்டம் நடத்திய வார்டு உறுப்பினர்களால், பரபரப்பு ஏற்பட்டது.அவிநாசி ஒன்றியம், வேலாயுதம்பாளையம் ஊராட்சியில், ஊராட்சி அலுவலகம் முன், நேற்று காலை, உறுப்பினர்கள் முத்துசாமி, (2வது வார்டு), ஜெகநாதன், (4வது வார்டு), கார்த்தி (6வது வார்டு), பிரகாஷ், (9வது வார்டு), ஆகியோர் கொசு வலைக்குள் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.உறுப்பினர்கள் கூறுகையில், ''ஊராட்சி தலைவர் மற்றும் துணை தலைவர் பெண்களாக இருப்பதால், அவர்களது கணவர்களின் ஆதிக்கமே அதிகம் உள்ளது. குறிப்பாக, துணை தலைவரின் உறவினர் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. கொரோனா, டெங்கு சமயத்தில், கொசு மருந்து அடிப்பது உள்ளிட்ட எந்தவொரு சுகாதாரம் சார்ந்த பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. இது குறித்து, கலெக்டரிடம் மனு கொடுக்க உள்ளோம்,'' என்றனர்.ஊராட்சி தலைவர் சாந்தி கூறுகையில், ''கடந்த, 20 ஆண்டுகளாக தீர்க்கப்படாத பணிகளை, கடந்த, 2 ஆண்டில் செய்து கொடுத்துள்ளோம். இன்னும், நிறைய பணிகள் செய்ய வேண்டியுள்ளது. சில வார்டு உறுப்பினர்கள் ஒத்துழைப்பு வழங்காமல், இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர்,'' என்றார்.பொதுமக்கள் சிலர் தலையிட்டு, சமாதானம் செய்து வைத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைந்து போக செய்தனர். இதனால், வேலாயுதம்பாளையம் ஊராட்சி அலுவலகம் முன் பரபரப்பு ஏற்பட்டது.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X