ரூ.28 கோடியில் குடகனாறு அணை புதுப்பிக்கப்படும்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 டிச
2021
00:48

வேடசந்தூர் : அழகாபுரி குடகனாறு அணை ரூ.28 கோடியில் புதுப்பிக்கப்படும் என மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.வேடசந்துார் வழியாகச் செல்லும் குடகனாற்றில், அழகாபுரி அருகே 27 அடி கொள்ளளவு கொண்ட அணை கட்டப்பட்டுள்ளது.



இரண்டு பாசன கால்வாய்கள் மூலம் திண்டுக்கல், கரூர் மாவட்டங்களில் 9 ஆயிரம் ஏக்கர் நிலம் நீர்பாசனம் பெறுகிறது. தற்போதைய நிலவரப்படி அணையில் 24 அடி தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. அணைக்கு வினாடிக்கு 450 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது. இரண்டு பாசன கால்வாய்களில் 110 கன அடி நீரும், எஞ்சிய நீர் குடகனாற்றிலும் திறந்துவிடப்படுகிறது.



இந்த அணையை நேற்று மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி பார்வையிட்டார். அப்போது அவர் கூறியதாவது:நீர்நிலைகளை மேம்படுத்தும் பணியில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது அதன் தொடர்ச்சியாக குடகனாறு அணையில் 27 அடி தண்ணீர் தேக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.அதற்காக ரூ.28 கோடியில் திட்டம் தயார் செய்யப்பட்டு அரசின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. நிதி வந்ததும் பழைய ஐந்து ஷட்டர்கள், அணை , வாய்க்கால் உள்ளிட்ட பராமரிப்பு பணிகள் செய்யப்பட்ட பிறகு, குடகனாறு அணையில் 27 அடி தண்ணீர் தேக்கப்படும், என்றார். காந்திராஜன் எம்.எல்.ஏ., திண்டுக்கல் கலெக்டர் விசாகன், கரூர் கலெக்டர் பிரபுசங்கர், தி.மு.க., நிர்வாகிகள் கிருஷ்ணன், கவிதா, சீனிவாசன், சுப்பையன், நடராஜன், ஜீவா, கார்த்திகேயன், ரவிசங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

Advertisement
மேலும் திண்டுக்கல் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X