கட்டுமான தொழிலாளர் சங்கத்தினர் மறியல் | திண்டுக்கல் செய்திகள் | Dinamalar
கட்டுமான தொழிலாளர் சங்கத்தினர் மறியல்
Advertisement
 

பதிவு செய்த நாள்

04 டிச
2021
00:51

திண்டுக்கல் : திண்டுக்கல்லில் கோரிக்ககைளை வலியுறுத்தி இந்திய கட்டுமான தொழிலாளர் சங்கத்தினர் மறியல் செய்தனர். நிர்வாகிகள் சிறுமணி, சுரேஷ் தலைமை வகித்தனர். சண்முகம், கண்ணன் முன்னிலை வகித்தனர். சி.ஐ.டி.யு., மாவட்ட செயலாளர் கணேசன், துணைச் செயலாளர் ஜெயசீலன் பேசினர். மாநிலக்குழு உறுப்பினர் தீத்தான், புஷ்பம் பங்கேற்றனர்.



'கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்தவும், ஜி.எஸ்.டி., வரியை குறைக்கவும் வேண்டும். கட்டுமான தொழில் தொழிலாளர்களின் சட்டங்களை திருத்த கூடாது. பென்ஷன் 3 ஆயிரம், பெண்களுக்கு 55 வயதில் பென்ஷன் வழங்க வேண்டும். இணைய வழி பதிவில் உள்ள குளறுபடிகளை சரி செய்ய வேண்டும்'ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தினர். பின் ரோடு மறியலில் ஈடுபட முயன்ற 62 பெண்கள் உட்பட 100 பேர் நகர் வடக்கு போலீசார் கைது செய்தனர்.* பழநியில் தலைமை தபால் நிலையம் முன்புறம் இந்திய கட்டுமான தொழிலாளர் சங்கம் சார்பில் நடந்த போராட்டத்தில் ஒன்றிய தலைவர் ஈஸ்வரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X