அணையில் மண் திருட்டுநடவடிக்கை கோரி வழக்கு; உயர்நீதிமன்றம் உத்தரவு | திண்டுக்கல் செய்திகள் | Dinamalar
அணையில் மண் திருட்டுநடவடிக்கை கோரி வழக்கு; உயர்நீதிமன்றம் உத்தரவு
Added : டிச 04, 2021 | |
Advertisement
 


மதுரை : திண்டுக்கல் மாவட்டம் பழநி கனகராஜ். உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு: பழநி நகராட்சி பகுதி குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய ரூ.14 கோடியில் கோடைகால நீர்த் தேக்கம் அணை கட்டப்பட்டது.



மழையின்போது கொடைக்கானல் மலையிலிருந்து அணைக்கு வருகிறது. ஆளுங்கட்சியைச் சேர்ந்த சிலர் சட்டவிரோதமாக மண் அள்ளுகின்றனர். அணைக்கு பாதிப்பு ஏற்படும். மண் அள்ள தடை விதிக்க வேண்டும். மண் அள்ளுவோருக்கு ஆதரவாக செயல்படும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, பி.வேல்முருகன் அமர்வு: மனுவை திண்டுக்கல் கலெக்டர் பரிசீலிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட நபர்களிடம் விசாரித்து விளக்கமளிக்க வாய்ப்பளிக்க வேண்டும். தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும். ஜன.,18 ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றனர்.

 

Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X