ஒட்டன்சத்திரம்:தொடர் மழை காரணமாக ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டிற்கு காய்கறி வரத்து குறைந்துள்ளது.
மழையால் பாதிக்கப்பட்ட முருங்கை காய்கள் தரம் குறைந்து காணப்படுகிறது. இதனால் தரமான காய்கள் நாசிக் பகுதியில் இருந்து இங்கு கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.நாசிக் முருங்கை நேற்று கிலோ ரூ. 270க்கு விற்றது. அதேசமயம் உள்ளூர் கரும்பு முருங்கை ரூ.140 க்கும் செடிமுருங்கை ரூ.100 க்கும் விற்பனையானது.
கமிஷன் கடை உரிமையாளர் மூர்த்தி கூறுகையில்," தொடர் மழை காரணமாக உள்ளூர் பகுதி முருங்கை விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் நாசிக் பகுதியில் விளைந்த முருங்கை இங்கு கொண்டுவரப்படுகிறது. விலையும் அதிகம் உள்ளது, என்றார்.