கோவை:மத்திய அரசின் சிறுபான்மையினருக்கான பள்ளிப்படிப்பு, பள்ளி மேற்படிப்பு மற்றும் வருவாய், தகுதி அடிப்படையிலான கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தில், விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.நடப்பாண்டில் கல்வி உதவித்தொகை பெற, புதியது மற்றும் புதுப்பித்தலுக்கு தகுதியுள்ள மாணவர்கள் அனைவரும் டிச.,15ம் தேதிக்குள், தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.விண்ணப்பத்தை சம்பந்தப்பட்ட கல்வி நிலையங்களில் ஒப்படைப்பது அவசியம். புதுப்பித்தல் விண்ணப்பங்களுக்கு வருமான சான்று சமர்ப்பிக்க அவசியமில்லை.ஆதார் விவரங்களில் பெயர் மாற்றம் காரணமாக, புதுப்பித்தலுக்கு விண்ணப்பிக்காதவர்களும் தற்போது விண்ணப்பிக்கலாம்.அனைத்து கல்வி நிலையங்களும், புதியது மற்றும் புதுப்பித்தல் கல்வி உதவித்தொகைக்கு தகுதியான மாணவர்களை தொடர்பு கொண்டு, இணையத்தில் டிச.,15க்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்த வேண்டும்.மேலும் விவரங்களுக்கு, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அமைந்துள்ள பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என்று, கோவை கலெக்டர் தெரிவித்துள்ளார். போன்: 2300404.