கார் 'ஹாரன்' ஒலித்ததில் தகராறு | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
கார் 'ஹாரன்' ஒலித்ததில் தகராறு
Advertisement
 

பதிவு செய்த நாள்

04 டிச
2021
01:07

கோவை:சிறுமுகை விவசாயியை கத்தியை காட்டி மிரட்டியதுடன், கார் கண்ணாடியை அடித்து நொறுக்கிய இருவருக்கு, சிறை தண்டனை விதித்து கோவை கோர்ட் தீர்ப்பளித்தது.சிறுமுகை ஓய்வு விடுதி பாதையை சேர்ந்தவர் ரவீந்திரநாத், விவசாயி. இவர், 2014ம் ஆண்டு அக்.8ம் தேதி தன் காரில் சிறுமுகை சென்று கொண்டிருந்தார்.அப்போது பைக்கில் முன் சென்றவர்களை வழி விட வைப்பதற்காக ரவீந்திரநாத் நீண்ட நேரம் ஹாரன் ஒலிக்கச்செய்தார். இதில் ஆத்திரம் அடைந்த அதே ஊரை சேர்ந்த ரங்கநாதன், 29, சுப்பிரமணி, 30, ஆகியோர் வாக்குவாதம் செய்தனர்.அதை பொருட்படுத்தாத ரவீந்திரநாத், காரில் புறப்பட்டுச் சென்று விட்டார். அவரை பின்தொடர்ந்து சென்ற ரங்கநாதன், சுப்பிரமணி இருவரும், கத்தியை காட்டி மிரட்டி தாக்குதல் நடத்தியதுடன், கார் கண்ணாடியையும் உடைத்து விட்டனர்.இந்த வழக்கு, கோவை குண்டு வெடிப்பு வழக்கு சிறப்பு கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் சிறப்பு வக்கீல் கார்த்திகேயன் வழக்கு நடத்தினார்.விசாரித்த சிறப்பு நீதிபதி பாலு, குற்றம் சாட்டப்பட்ட ரங்கநாதனுக்கு, மூன்றாண்டு சிறை தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தார். சுப்பிரமணிக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X