தொண்டாமுத்தூர்:பேரூர் தாலுகாவிற்கு உட்பட்ட, தேவராயபுரம் வருவாய் கிராமத்திற்கான, சிறப்பு பட்டா திருத்த முகாம், தேவராயபுரம் வி.ஏ.ஓ., அலுவலகத்தில் நேற்று நடந்தது.காலை, 9:30 முதல் மாலை, 5:30 மணி வரை முகாம் நடந்தது. இதில், பட்டா பிழை திருத்தம், பட்டா மாற்றம், நத்தம் பட்டா கோரி என, மொத்தம், 149 மனுக்கள் பெறப்பட்டன. இதில், 17 பட்டா பிழை திருத்தம், 5 பட்டா மாற்றம் என, 22 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது.தீர்வு காணப்பட்ட மனுக்களுக்கான சான்றிதழை, தெற்கு ஆர்.டி.ஓ., இளங்கோ மற்றும் பேரூர் தாசில்தார் ரமேஷ் ஆகியோர் வழங்கினர். மீதமுள்ள மனுக்கள் மீது விசாரணை நடத்த, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, வருவாய்த்துறையினர் தெரிவித்தனர்.