போத்தனூர்:ஈச்சனாரி அருகேயுள்ள ராஜ் விஜய் நகரை சேர்ந்தவர் ஹரி ராமபிரசாத். மனைவி வாசுகி, 27. நேற்று மதியம் இவர் வீட்டினுள் வேலை செய்து கொண்டிருந்தார். இரண்டு வயது குழந்தை மற்றும் தாயார் சரஸ்வதி,78 உடனிருந்தனர். அப்போது அடையாளம் தெரியாத நான்கு பேர் வீட்டினுள் நுழைந்தனர். வாசுகியிடம் ஒரு முகவரியை கேட்டனர். பதில் கூற முயன்ற வாசுகியின் வாயை பொத்தினர். கழுத்திலிருந்த ஏழரை பவுன் நகையை பறித்து தப்பினர். மதுக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து, தப்பியவர்களை தேடுகின்றனர். பட்டப்பகலில் நடந்த இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.