நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு: மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 டிச
2021
01:14

தொண்டாமுத்தூர்:வேடபட்டி புதுக்குளத்தில், நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு குறித்து, மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு செய்தார்.அனைத்து நீர் நிலைகளிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை, ஒரு வாரத்திற்குள் அகற்ற வேண்டுமென, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவின்படி, நீர்நிலை ஆக்கிரமிப்புகள் நிச்சயம் அகற்றப்படும் என, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனும் தெரிவித்துள்ளார்.இந்நிலையில், கோவையில் உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்புகள் குறித்தும், கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. கோவையின், முக்கிய நீராதாரமாக உள்ள நொய்யல் ஆறு, அதன் வழங்கு வாய்க்கால்கள் மற்றும் குளங்களில் பல இடங்களிலும், ஆக்கிரமிப்புகள் உள்ளன.இதனால், நீர்வழித்தடங்கள் பல இடங்களிலும், நீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், வேடபட்டி, புது குளத்தில் உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்பு குறித்து, நில அளவை செய்யப்பட்டது.நீர்நிலை ஆக்கிரமிப்புகள் குறித்து, மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ் ஆய்வு செய்தார். ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.ஆய்வின் போது, மாவட்ட நில அளவை பதிவேடுத்துறை உதவி இயக்குனர் தவமணிஉள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X