அன்னுார்:அன்னுார் மன்னீஸ்வரர் கோவில் ஆயிரம் ஆண்டுகள் பழமையானது.இக்கோவிலில் மன்னீஸ்வரர், முருகப்பெருமான், அருந்தவ செல்வி அம்மன், சூரியன், சந்திரன், விநாயகர், சனீஸ்வரர், குரு பகவான் என பல சன்னதிகள் உள்ளன. கோசாலையும், மகா மண்டபமும் உள்ளது.இக்கோவில் கொரோனா காரணமாக பல மாதங்கள் மூடப்பட்டிருந்தது. தற்போது வழிபாட்டுக்கு, திறக்கப்பட்டுள்ளது.பல மாதங்கள் மூடப்பட்டதை அடுத்து பக்தர்கள் உழவாரப்பணி செய்ய திட்டமிட்டுள்ளனர்.'வரும் 5ம் தேதி காலை 8:00 முதல் மதியம் 2:00 மணி வரை, கோவில் வளாகத்தில் உழவாரப்பணிநடக்கிறது. ஆர்வமுள்ளவர்கள் பங்கேற்கலாம்' என பக்தர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.