உயர்மின் கோபுரத்தால் பாதிப்பு: விவசாயிகள் போராட்டம் | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
உயர்மின் கோபுரத்தால் பாதிப்பு: விவசாயிகள் போராட்டம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

04 டிச
2021
01:20

சூலுார்:உயர் மின் கோபுரங்கள் அமைப்பதால் பாதிக்கப்படும் விவசாயிகள், கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், தமிழக விவசாயிகள் போராட்டக்குழு சார்பில், சுல்தான்பேட்டை அடுத்த ஓடக்கல்பாளையத்தில் உயர் மின் கோபுரத்தில் குடியேறும் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.சங்கத்தின் மாநில துணைத்தலைவர் ஓடக்கல்பாளையம் தென்னவன் அரசேந்திரன், நல்லுார் பாளையம் மோகன்ராஜ் ஆகியோர் தலைமையில் விவசாயிகள் நேற்று அங்கு வந்தனர்.சூலுார் இன்ஸ்பெக்டர் மாதையன் தலைமையிலான போலீசார், விவசாயிகளை தடுத்து நிறுத்தினர்.ஆவேசமடைந்த விவசாயிகள், தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.விவசாயிகள் கூறுகையில்,' கோர்ட்டில் வழக்குகள் இருக்கும்போது பணிகளை நடத்துவது கண்டனத்துக்குரியது. பணிகளை நிறுத்தவேண்டும். 100 சதவீத இழப்பீட்டுக்கு பதிலாக, 200 சதவீத இழப்பீடு வழங்கவேண்டும். மாத வாடகை வழங்க வேண்டும். வீடு, கிணறு, போர்வெல் ஆகியவற்றுக்கு அதிக இழப்பீடு வழங்க வேண்டும். விவசாயிகள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை திரும்ப பெறவேண்டும்,' என்றனர்.கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பிய விவசாயிகள், மனுவை, அதிகாரிகளிடம் வழங்கிவிட்டு கலைந்து சென்றனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X