பெ.நா.பாளையம்:கவுண்டம்பாளையம் அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்திலுள்ள மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான பகல் நேர பராமரிப்பு மையத்தில், உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா கொண்டாடப்பட்டது.கோவை மாவட்ட பள்ளிக்கல்வி துறையின் சார்பில், ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் கீழ், பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் வசிக்கும் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான, பகல் நேர பராமரிப்பு மையம் கவுண்டம்பாளையம் ஹவுசிங் யூனிட் வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. இங்கு, 20க்கும் மேற்பட்ட மாற்றுத்திறன் குழந்தைகள் கல்வி மற்றும் பயிற்சிகளை பெறுகின்றனர்.இந்நிகழ்ச்சியில் குழந்தைகளின் திறன் மேம்பாடு, செயல்பாடுகளில் மாற்றம் குறித்த அனுபவங்கள் குறித்து பெற்றோர் பகிர்ந்துகொண்டனர். தன்னார்வலர்கள் உதவியுடன் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. குழந்தைகளின் தனித்திறன் வெளிப்படுத்தும் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.இதில், பிசியோதெரபிஸ்ட் மதனகோபால், சிறப்பு கல்வி ஆசிரியர்கள் தேன்மொழி, ராணி ஸ்ரீபிரியா, ஆர்த்தி, பள்ளியின் தலைமை ஆசிரியை திருமகள், மாற்றுத்திறனாளிகள் நல அமைப்பின் தன்னார்வலர்கள் கார்த்திக், கார்த்திக் குமார், அபிலாஷ் பராமரிப்பு மைய ஆசிரியை உமா, சுதா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.