அன்னுார்:அன்னுார் தாலுகாவில், இன்று 98 மையங்களில் தடுப்பூசி போடப்படுகிறது.அன்னுார் தாலுகாவில், இன்று மெகா தடுப்பூசி முகாம் நடக்கிறது. அன்னுார் வட்டாரத்தில், அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையம், சத்துணவு மையம், துவக்க, நடுநிலைப்பள்ளி என, 69 இடங்களில் இன்று காலை 9:00 முதல் மாலை 5:00 மணி வரை தடுப்பூசி போடப்படுகிறது.சர்க்கார் சாமக்குளம் வட்டாரத்தில் கோவில்பாளையம், இடிகரை ஆரம்ப சுகாதார நிலையங்கள், துவக்க, நடுநிலைப்பள்ளிகள் என, 29 மையங்களில் இன்று காலை 9:00 முதல் மாலை 5:00 மணி வரை தடுப்பூசி போடப்படுகிறது.அன்னுாரில் நேற்று ஒருவருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை. எஸ்.எஸ்.குளம் ஒன்றியத்தில், இடிகரையில் நேற்று ஒருவருக்கு டெங்கு காய்ச்சல் உறுதியானது. இதையடுத்து அப்பகுதியில் பேரூராட்சி சார்பில் துாய்மைப் பணி செய்யப்பட்டது.