இன்று 921 இடங்களில்மெகா தடுப்பூசி முகாம் | திண்டுக்கல் செய்திகள் | Dinamalar
இன்று 921 இடங்களில்மெகா தடுப்பூசி முகாம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

04 டிச
2021
01:27

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் இன்று 921 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடக்கிறது.



திண்டுக்கல் மாவட்டம் தடுப்பூசி செலுத்துவதில் 100 சதவீதம் இலக்கை அடையும் நோக்கில் தொடர்ந்து தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது. அதன்படி, இன்று (டிச.4) கமலா நேரு மருத்துவமனை, கருமாரி அம்மன் கோயில் தெரு, சமயபுரம் கோயில் தெரு, ஐய்யங்கார் பெட்ரோல் பங்க், மேற்கு ஆரோக்கியமாதா தெரு, கென்னடி மாநகராட்சி பள்ளி, ஸ்பென்சனர் காம்பவுன்ட், பெரிய கடை வீதி, மக்கான் தெரு காந்திஜி பள்ளி, சேவியர் தெரு,எம்.எஸ்.பி., பள்ளி, திருநகர் நகராட்சி நடுநிலை பள்ளி, சாமியார் தோட்டம்,

சிறுமலை செட் ரோடு உட்பட மாவட்டம் முழுதும் 921 இடங்களில் காலை 9:00 முதல் மாலை 5:00 மணி வரை தடுப்பூசி முகாம் நடக்கிறது. ஏற்கனவே முதல் தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் இம்முகாமில் 2வது தவணையை போட்டுக் கொள்ள வேண்டும். இதன் மூலம் தொற்று பரவலை தடுக்க மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என, கலெக்டர் விசாகன் தெரிவித்தார்.

 

Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X